இபிஎப்ஓ எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய வசதி

By செய்திப்பிரிவு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களுடைய வைப்பு நிதி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள சந்தாதாரர் களுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் எண் (யுஏஎன்) வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, யுனிவர்சல் அக்கவுண்ட் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான புதிய வசதி தொடங்கப்பட் டுள்ளது.

www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் சர்வீஸ், இ-கேஒய்சி போர்டல் என்ற லிங்க்கில் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்படும்போது சந்தாதாரர்களின் செல்போனுக்கு ஓடிபி எண் வரும். அந்த எண்ணைப் பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம்.

பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்