குடிநீர் வாரிய பணிக்கு எழுத்துத் தேர்வு: இணையதளத்தில் நுழைவுச் சீட்டு

By செய்திப்பிரிவு

சென்னை குடிநீர் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.அருண் ராய் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை குடிநீர் வாரியத்தில் துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர், முதுநிலை கணக்கு அலுவலர், உதவிப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல், எலெக்டிரிக்கல்) மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற பல்வேறு பணிகளுக்கு நபர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு செப். 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கான நுழைவுச் சீட்டை www.chennaimetrowater.gov.in மற்றும் www.chennaimetrowater.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்