சிஎஸ்ஐஆர் வளாகத்தில் ஆராய்ச்சி, மேம்பாட்டு கண்காட்சி: மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்

By செய்திப்பிரிவு

சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதை ஏராளமான மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

சிஎஸ்ஐஆர் என்று அழைக்கப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நாடு முழுவதும் 38 தேசிய ஆய்வகங்கள், 50 கள ஆய்வகங்கள் இயங்குகின்றன. சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனம், தேசிய உலோகவியல் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் மண்டல மையங்களும் அமைந்துள்ளன. மேலும் அந்த வளாகத்தில், கட்டு மான சோதனை ஆய்வகம், மேம்பட்ட கான்கிரீட் சோதனை மற்றும் பகுப்பாய்வு ஆய்வகம் உட்பட பல்வேறு ஆய்வகங்களும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், சிஎஸ்ஐஆர் அமைப்பின் பவளவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் பற்றிய கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியைப் பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் நேற்று அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்ற இந்த அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

13 hours ago

ஓடிடி களம்

13 hours ago

மேலும்