செப். 25-ல் தலைமை செயலகம் முற்றுகை: மணல் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் யுவராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:

அரசே நேரடியாக மணலை வழங்கும் என்றும், படிப்படியாக புதிய குவாரிகள் திறக்கப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அறிவிப்பு வெளி வந்து 5 மாதங்கள் ஆகியும்கூட முதல்வர் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் தற்போது 7 மணல் குவாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. இதனால் ஒரு லாரிக்கு மாதம் 1-லோடு மட்டுமே கிடைக்கிறது. இதனால் செப்.25-ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 24-சங்கங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

இந்தியா

17 mins ago

விளையாட்டு

6 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

44 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்