ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் டிஜிபிக்களாக பதவி உயர்வு; 14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

கூடுதல் டிஜிபிக்கள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோருக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட அறிவிப்பு:

1. பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி சங்காராம் ஜாங்கிட் சென்னை போக்குவரத்துக் கழக கண்காணிப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

2. சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு கழக டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

3. மாநில மனித உரிமைகள் ஆணைய ஏடிஜிபி சி.கே.காந்திராஜன் மாநில மனித உரிமைகள் ஆணைய டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

4. சேலம் உதவி எஸ்பி சுஜித்குமார் கோவை போக்குவரத்து துணைஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. கிருஷ்ணகிரி உதவி எஸ்பி ரோகித் நாதன் ராஜகோபால் அடையாறு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6. அடையாறு துணை ஆணையர் பி.சுந்தர வடிவேல் உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

7. கடலோர காவல் குழும ஏடிஜிபி என். தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழக தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

8. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழக தலைவர் விஜய்குமார் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

9. ஊர்க்காவல்படை ஏடிஜிபி சுனில்குமார் சிங் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

10. சென்னை போக்குவரத்துக் கழக கண்காணிப்பு டிஜிபி கே.வன்னியபெருமாள் கடலோர காவல் குழும ஏடிஜிபியாக இடமார்றம் செய்யப்பட்டுள்ளார்.

11. விரிவாக்கத்துறை ஏடிஜிபி கருணாசாகர் ஊர்க்காவல்படை ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

12. நவீனமயமாக்கல் துறை ஏடிஜிபி ராஜீவ்குமார் காவலர் நலன் ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

13. காவலர் நலன் ஏடிஜிபி பிரதீப் வி.பிலிப் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

14. கட்டாய காத்திருப்பு பிரிவு ஐஜி வினித் தேவ் வான்கடே நவீன மயமாக்கல் துறை ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

இவ்வாறு நிரஞ்சன் மார்டி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்