நடைப் பயிற்சிக்கு சென்ற போது துணிகரம்: அசோக் நகரில் வழக்கறிஞர் வீட்டில் 35 சவரன் நகை திருட்டு

By செய்திப்பிரிவு

அசோக் நகரில் வழக்கறிஞர் ஒருவர், நடைப் பயிற்சி சென்றதைப் பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் 35 சவரன் நகையைத் திருடி சென்றுவிட்டார்.

சென்னை அசோக் நகர் 7 வது அவென்யூவில் வசிப்பவர் நிர்மல்குமார்(52). இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். தினமும் காலையில் நடைப் பயிற்சி செல்வது வழக்கம். இன்றும் நிர்மல் குமார் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல் காலையில் நடைப் பயிற்சிக்கு சென்றார்.

ஒரு அறையில் மகள்களும் , மற்றொரு அறையில் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் நிர்மல் குமார் மனைவி உறங்கிக்கொண்டிருந்த அறைக்குள் புகுந்து திறந்திருந்த பீரோவில் இருந்த 35 சவரன் நகைகளை திருடிச் சென்றுவிட்டார்.

நகைகள் திருடு போனது குறித்து வழக்கறிஞர் நிர்மல் குமார் அசோக்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்