5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிகளில் சேர்ப்பு: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

By செய்திப்பிரிவு

கடந்த 5 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளிகளாக இருந்து மீட்கப்பட்ட 21 ஆயிரத்து 622 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என டெல்லியில் நடைபெற்ற தேசிய குழந்தை தொழிலாளர் மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் நிலோபர் கபில் பேசுகையில், ''கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சத்து 82 ஆயிரத்து 627 ஆய்வுகள் நடத்தப்பட்டதில், 425 ஆய்வுகளில் விதிமீறல் கண்டறியப்பட்டது. அதன் மூலம் 312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், ரூ. 24 லட்சத்து 53 ஆயிரத்து 825 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 21 ஆயிரத்து 622 குழந்தைகள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கையெழுத்து இயக்கம், முகநூல் பக்கம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் நிலோபர் கபில் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்