இணையதள பதிவு மூலமே அரசு மணல்: எம்- சாண்டு மூலம் கட்டிடம் கட்டுவோருக்கு சலுகை - முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

‘எம்-சாண்டு மூலம் கட்டிடம் கட்டுவோருக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும். இணையதளம் மூலமே மணல் விற்பனையை அரசு மேற்கொள்ள வேண்டும்’ என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மணல் குவாரி களை அரசே ஏற்று நடத்தும் என சில தினங்களுக்கு முன் மதுரை யில் முதல்வர் கே.பழனிசாமி அறி வித்தார். இதை மணல் லாரி உரி மையாளர்கள் சங்கங்கள் வரவேற் றுள்ளன. இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமியை, தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப் போது முதல்வரிடம் அவர்கள் அளித்த மனு:

தமிழகம் முழுவதும் 38 அரசு மணல் குவாரிகள் இயங்கி வந்தன. அவற்றில் 17 குவாரிகளுக்கு அனுமதி காலம் முடிந்துவிட்டதால், 21 குவாரிகள் மட்டுமே இயக் கப்பட்டன. இதனால், ஒரு லோடு மணலுக்கு 7 நாட்கள் வரை லாரிகள் காத்திருந்தன. மணல் விலையும் கடுமையாக உயர்ந்த தால் கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. அதில் 9 குவாரிகளில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் மனித சக்தி மூலம் மணல் அள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மற்ற குவாரிகளில் மணல் அள்ள தடையில்லை என்றும் தெரிவித்தது.

ஆனால், பொதுப்பணித்துறை யினர் மொத்தமாக 21 குவாரிகளை யும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கட்டுமானங்களுக்கு தினசரி 10 ஆயிரம் லோடும், தமிழகம் முழுவதும் தினசரி 30 ஆயிரம் லோடும் மணல் தேவைப்படுகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மனித சக்திகளை பயன்படுத்தினால் மணல் தட்டுப்பாடு அதிகமாகும். எனவே, உயர் நீதிமன்றத்தில் அரசே மேல் முறையீடு செய்து அனைத்து குவாரிகளிலும் இயந்திரங்கள் மூலம் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், தனியாரால் நடத்தப்படும் மணல் விற்பனைக்குத் தடைவிதித்து அரசே நேரடியாக மணல் குவாரிகளை இயக்கும் என முதல்வர் அறிவித் துள்ளார். அதே போல், எம்-சாண்டு பயன்படுத்த முன்வரவேண்டும் என்றும் கேட்டுள்ளார். அரசு அறிவித்துள்ள 2 யூனிட் மணல் ரூ.2 ஆயிரம் மட்டுமே. ஆனால், 2 யூனிட் எம்-சாண்டு ரூ.6 ஆயிரத்துக்கு விற்கின்றனர். இதனால், எம்-சாண்டு வாங்குவதற்கு பதில் மணல் வாங்குவதையே விரும்புவார்கள். எனவே, எம்-சாண்டு வாங்கி கட்டிடம் கட்டுவோருக்கு சலுகை கள் வழங்க வேண்டும். அதே போல், இணைய தள பதிவு முறையில் மணல் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்