நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை அவமானப்படுத்துவதா?- அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் அவமானப்படுத்தப்பட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகள் விவரம்:

மு.க.ஸ்டாலின் (திமுக):

‘நீட்’ தேர்வே கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை. அதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் பல துன்பங்களுக்கு, அவமானப்படுத்தக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டதை திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயகாந்த் (தேமுதிக):

முதன் முதலில் ‘நீட்’ தேர்வு எழுத வரும் மாணவர் களுக்கு, தேர்வு எழுதும் முறைகளை அரசு முன்கூட்டியே செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, தேர்வு எழுத வந்த மாணவர்களின் சட்டைகளை வெட்டியது, மாணவிகளின் செயின், தோடு போன்ற அணிகலன்களை எடுக்கச் செய்தது போன்றவை அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டது. இதுபற்றி மாணவர்களுக்கு முறையான அறிவிப்பை செய்யத் தவறிய தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்):

‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவ, மாணவி களிடம் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர வாதிகளைப்போல சோதனை நடத்தியுள் ளனர். இத்தகைய கெடுபிடியான சூழலில் எப்படி தேர்வை சிறப்பாக எழுத முடியும். இத்தகைய கொடுமைகளை பார்க்கும்போது நாம் இந்தியாவில் வாழ்கிறோமா, அல்லது இடிஅமீன் ஆட்சி செய்த நாட்டில் வாழ்கிறோமா என்ற சந்தேகமும், அச்சமும் எழுகிறது.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):

‘நீட்’ தேர்வு மையங்களில் நடந்த கடுமையான கெடுபிடிகளும் சோத னைகளும் மாணவர்கள், பெற்றோர்களி டையே கடுமையான அதிர்ச்சியை, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது படுமோசமான மனித உரிமை மீறல் மட்டுமல்லாது, தேர்வுக்கு தயாரிப்புடன் வந்த மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் நடவடிக் கைகளாகும். சிபிஎஸ்இ வாரியத்தின் இந்த மோசமான நடவடிக்கை கண்டிக் கத்தக்கது.

அன்புமணி ராமதாஸ் (பாமக):

முறை கேடுகளை தடுப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் மாணவ, மாணவி களிடம் தேர்வு அதிகாரிகள் கொடூரமான கெடுபிடியை காட்டியுள்ளனர். சிபிஎஸ்இ நிர்வாகத்தின் இச்செயல் கண்டிக்கத்தக்கது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காட்டப்பட்டது போன்ற கெடுபிடிகளில் 10 சதவீதம்கூட வடமாநிலங்களில் காட்டப்படவில்லை.

ஜி.கே.வாசன் (தமாகா):

‘நீட்’ தேர்வில் இருந்து அரசு விலக்கு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவ, மாணவிகளுக்கு பெருத்த ஏமாற் றம்தான் கிடைத்தது. வேறுவழி இல்லா மல் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத் தில் வந்த மாணவர்களிடம் கடும் கட்டுப்பாடுகளை மேற்கொண்ட அரசின் செயல்பாடுகள் ஏற்புடையதல்ல.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வு ரிமைக் கட்சி):

‘நீட்’ தேர்வில் விதிக்கப்பட்ட மிக மோசமான கட்டுப்பாடுகளால் மாண வர்கள் பெருத்த அவமானத்தை சந்திக்க நேர்ந்தது. பிஹாரிலும் ராஜஸ்தானிலும் முன்கூட்டியே கேள்வித்தாள் கசிய விடப்பட்டுள்ளது. கேள்வித்தாள் தயாரித்த சிபிஎஸ்இ அமைப்பைச் சேர்ந்த நபரே இதை செய்து பணம் பார்த்ததாக செய்திகள் தெரிவிக் கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்