எஸ்எஸ்எல்சி முடிவு இன்று வெளியீடு: மதிப்பெண்ணுடன் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் வரும்

By செய்திப்பிரிவு

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவு வெளியான அடுத்த 2 நிமிடத்தில் அனைத்து மாணவர்களுக்கும் மதிப் பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர், சிறைக் கைதிகள் 224 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர்.

தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று, தேர்வு தொடங்குவதற்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, எஸ்எஸ்எஸ்சி தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட அடுத்த 2 நிமிடத்தில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்ணுடன் கூடியதேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை செய்துள்ளது

பொதுத்தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்குத் தெரிவிக்கும் முறை இந்த ஆண்டுதான் முதல் முதலாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவின்போதும் இதே முறை பின்பற்றப்பட்டது. இதற்கு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தவிர, இணையதளங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவு,மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். தேர்வு முடிவு வெளியிடப்பட்ட அடுத்த சில விநாடிகளில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளைக் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre-NIC), அனைத்து மத்திய மற்றும் கிளை நூலகங்களிலும் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாகவே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

ரேங்க் பட்டியல் கிடையாது

வழக்கமாக, பொதுத்தேர்வு முடிவு வெளியாகும்போது, மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள், பாடவாரியாக முதல் 3 இடங்கள் பெற்றவர்களின் ரேங்க் பட்டியலை அரசு தேர்வுத்துறை வெளியிடும். இவ்வாறு மாணவர்களைத் தர வரிசைப்படுத்துவது மாணவர்கள், பள்ளிகள் இடையே ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதை தவிர்க்கும் விதமாக ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை இந்த ஆண்டுமுதல் ரத்து செய்யப் பட்டுள்ளது. சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டபோதும், ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதேபோல, எஸ்எஸ்எல்சி தேர்விலும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

55 mins ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்