வேலை நிறுத்தம் எதிரொலி: சென்னையில் 23 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு - ஓட்டுநர் உட்பட 12 பேர் கைது

By செய்திப்பிரிவு

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் எதிரொலி யாக சென்னையில் 23 பேருந்து களின் கண்ணாடிகள் உடைக்கப் பட்டுள்ளன. இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 15-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் பேருந்துகளை இயக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அதன் ஒரு பகுதியாக பிற மாவட்டங்களில் இயங்கி வந்த தனியார் பேருந்துகளையும் ஓட்டுநர்களையும் சென்னைக்கு அழைத்து வந்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை சென்னையில் 23 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தாக்கு தல் தொடர்பாக நேற்று வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுநரை தாக்கியவர் கைது

வியாசர்பாடியில் போராட்டத் தில் கலந்து கொள்ளாமல் மாநகர அரசு பேருந்தை இயக்கிய டிரைவர் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு டிரைவர் கைது செய்யப்பட்டார்.

எம்.கே.பி.நகரில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று முன்தினம் இரவு மாநகர அரசு பேருந்து (46 ஜி) சென்று கொண்டிருந்தது. ரவி என்பவர் பேருந்தை ஓட்டினார். வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரி சாலை, ஈஸ்வரன் கோயில் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்தை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற 2 பேர் அதை வழிமறித்தனர். திடீரென டிரைவர் ரவி மீது தாக்குதல் நடத்திய அவர்கள், பேருந்தை இயக்கக் கூடாது என எச்சரித்து அங்கிருந்து சென்றனர்.

இதுகுறித்து, வியாசர்பாடி காவல் நிலையத்தில் ரவி புகார் தெரிவித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்தியது வியாசர்பாடி டெப்போவில் டிரைவராக பணி செய்து வரும் ராமமூர்த்தி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் தொடர்புடைய கண்டக்டர் திருவேங்கடத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

35 mins ago

தமிழகம்

40 mins ago

தொழில்நுட்பம்

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

36 mins ago

வர்த்தக உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்