குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் 12 இடங்களில் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: குடியரசு தினவிழாவையொட்டி 12 இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் வரும் 26-ம்தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வரும்20, 22, 24, 26 ஆகிய 4 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இத்தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலைமுதல் போர் நினைவுச் சின்னம் வரைகாலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படுகிறது. வாலாஜா சாலை மற்றும்அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம்நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

அடையாறில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு வாகனங்கள், கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, அண்ணா சாலை வழியாக பிராட்வேவுக்கும், மாநகர பேருந்துகள் உட்பட பிற வாகனங்கள், காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்பட்டு, ராயப்பேட்டை ஒன் பாயின்ட், ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை வழியாக பிராட்வேவுக்கு சென்றடையும்.

மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்து (வழித்தடம் எண். 21ஜி)ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, அவை ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை வழியாக பிராட்வேவுக்கு சென்றடையும். அதேபோல் மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்துகள் (வழித்தடம் எண். 45பி,12ஜி) நீல்கிரிஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ஜி.பி.ரோடு, அண்ணா சாலைவழியாக தற்காலிக பேருந்து நிறுத்தமான சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.

டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ்-அவுஸ் சந்திப்பு நோக்கித் திருப்பி விடப்படும். அதேபோல் டாக்டர்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ்-அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும். மேலும் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கித் திருப்பி விடப்படும்.

வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை, காமராஜர் சாலைவழியாக அடையாறு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில்திருப்பி விடப்பட்டு, ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக ராயப்பேட்டை மணிக்கூண்டு, நடேசன்சாலை, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

உலகம்

14 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

38 mins ago

வாழ்வியல்

48 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்