முதல்வர் ஜெயலலிதாவும் மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலும்

By செய்திப்பிரிவு

மறைந்த தமிழக முதல்வர் ஜெய லலிதா கஷ்ட காலங்களில் தனது குலதெய்வமான மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வந்து பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங் கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதாவின் மூதாதையர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அப்போதைய மைசூரு மாகாணத் துக்கு (தற்போது கர்நாடகா) இடம் பெயர்ந்தனர். ஜெயலலிதா வின் தாய்வழி தாத்தா மைசூரு அரண்மனையில் முக்கிய பொறுப்பு வகித்தார். இதனால் ஜெயலலிதா வின் மூதாதையரும் மைசூரு உடையார் மகாராஜாக்களைப் போலவே சாமுண்டீஸ்வரியை தங்களது குல தெய்வமாக வணங்கினர்.

எனவே ஜெயலலிதா தனது இளமை காலத்தில் இருந்து ஒவ் வொரு பிறந்த நாளின்போதும் மைசூரு சாமுண்டி மலையிலுள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வார். பரபரப்பாக‌ திரைப் படங்களில் நடித்த போதும், அரசிய லில் பல்வேறு பதவிகளை வகித்த போதும் பிறந்த நாளின்போது சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வருவதை ஜெயலலிதா வழக்க மாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அரசியலில் நுழைந்த பிறகு சில ஆண்டுகளாக ஜெயலலிதா சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வராமல் இருந்தார். இருப்பினும் அவரது பெயரில் போயஸ் கார்டன் ஊழியர்களும், கர்நாடக மாநில அதிமுக செய லாளர் புகழேந்தியும் அங்கு பூஜை நடத்தினர். தேர்தலின் போதும், ஜெயலலிதா சிறையில் அடைக்கப் பட்டிருந்த போதும் அவரது பெயரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதிமுகவினர் பூஜை

கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு நேரில்வந்து பூஜை செய்தார். அதன்பிறகு ஜெய லலிதா நேரடியாக சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வரவில்லை. இந்நிலை யில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் குணமடைய வேண்டி அதிமுகவினர் பூஜை நடத்தினர்.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் ஜெயலலிதா சார்பில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தினர், சாமுண்டீஸ்வரி கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் விக்ரகத்துக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கவசம் மற்றும் அணிகலன்களை வழங்கினர். மேலும் விநாயகருக்கு ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்கக் கவசம், சங்கு, தும்பிக்கை ஆகியவற்றையும் அணிவித்தனர்.

இதேபோல சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் தங்கத்தால் செய்யப்பட்ட கைகள் மற்றும் பாதங்கள், வெள்ளியால் செய்யப்பட்ட பிரபாவளியும் வழங்கினர். மொத்தமாக ரூ.1.60 கோடிக்கு நகைகள் காணிக்கையாக‌ வழங்கப்பட்டன.

இருப்பினும் வேண்டுதல் பலிக்காமல் ஜெயலலிதா மறைந்ததால் மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில் நிர்வாகி கள் வருத்தம் அடைந்துள்ளனர். இறுதியாக நேற்று ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் நிர்கிவாகிகள் பூஜை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்