சட்டப்பேரவை நடவடிக்கையில் எவ்வாறு செயல்படுவது? - காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் பிரச்சினைகளின் அடிப்படையில் முடி வெடுத்து செயல்படுமாறு தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வென்றது. கூட்டணி கட்சியான திமுக 89 இடங்களில் வென்றது. இதனால் தோல்விக்கு யார் காரணம் என்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு மாதத்தில் திமுகவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக் கப்பட்டு, அதிமுகவுக்கு நெருக்க மானவராகக் கருதப்படும் சு.திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

திருநாவுக்கரசர் தலைவரானது முதல் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு 5 முதல் 10 சதவீத இடங்களையே திமுக ஒதுக்கியது. இது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கோபமடையச் செய்தது.

அப்போலோ மருத்துவமனை யில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வெளி யிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் பெண் தலைவரின் படத்தை வெளியிடுமாறு கோருவது நாகரிகமல்ல என திருநாவுக்கரசர் பதிலளித்தார்.

ஜெயலலிதா மரணம் அடைந்த தும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தி, சசிகலாவின் கணவர் நடராஜனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத் தார். அதற்கு பதிலளித்த திருநாவுக் கரசர், “வெள்ளை அறிக்கையோ, கறுப்பு அறிக்கையோ தேவை யில்லை. வெள்ளை அறிக்கை கேட்பதால் ஜெயலலிதா உயி ரோடு வரப்போவதில்லை” என்றார்.

கூட்டணியில் இருந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கடந்த 15-ம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, திமுகவை மட்டும் நம்பியிருக்காமல் நடு நிலையோடு செயல்படுமாறு ராகுல் காந்தி அப்போது ஆலோ சனை கூறியதாகக் கூறப்படுகிறது.

கே.ஆர்.ராமசாமி விளக்கம்

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் பேசிய கே.ஆர்.ராமசாமி, “தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினேன். நடப்பு அரசியல் நிலவரங்களை அவ ரிடம் விரிவாக எடுத்துக் கூறி னேன். அதனை பொறுமையாகக் கேட்ட அவர், பல்வேறு ஆலோ சனைகளை, அறிவுரைகளை வழங்கினார். சட்டப்பேரவையில் பிரச்சினைகளின் அடிப்படையில் முடிவெடுத்து செயல்படுமாறு அவர் அறிவுறுத்தினார். காங்கிர ஸைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருந்த நிலையை அப்படியே தொடர்வோம். அதே நேரத்தில் ராகுல் காந்தியின் அறிவுரைப்படி பிரச்சினைகளின் அடிப்படையில் முடிவெடுத்து செயல்படுவோம்” என்றார்.

பிரச்சினைகளின் அடிப்படை யில் என்றால், அதிமுக - திமுக இடையே சமதூரத்தை பின்பற்றவே ராகுல் காந்தி விரும்புவதாக காங்கிரஸ் நிர்வாகி கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

27 mins ago

ஜோதிடம்

33 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்