விழுப்புரம் அருகே கோர விபத்து: பேருந்துகள் மோதி 5 பேர் பலி; படுகாயமடைந்த 32 பேருக்கு தீவிர சிகிச்சை

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே தனியார் பேருந்து ஏற்படுத்திய இடையூறால் 2 அரசுப் பேருந்துகள் சாலையின் தடுப்புக் கட்டைகளைத் தகர்த்தெறிந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.

சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று, நேற்று மதியம் 1.30 மணியளவில் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை எதிரே உள்ள பாலத்தைக் கடக்க முயன்றது. அப்போது, முன்னால் சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென இடதுபுறத்தில் நிறுத்தி பயணிகளை இறக்க முயன்றது. இதை எதிர்பாராத அரசுப் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை திருப்ப முயற்சித்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்புக் கட்டையைக் கடந்து சென்றது. அப்போது எதிரே சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்துகொண்டு இருந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது அந்தப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையில் இருந்து வந்த பேருந்து கவிழ்ந்து உருக்குலைந்தது. இந்த விபத்தில் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரின் 2 வயது குழந்தை கிருத்தீஷ்சாய், விழுப்புரம் அருகே நல்லாப்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார்(23) மற்றும் ஒரு பெண், 2 ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸார் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். இதில் குழந்தை கிருத்தீஷ்சாய் தவிர உயிரிழந்த மற்ற 4 பேர் அடையாளம் காணப் படவில்லை. உடல்கள் மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளன.

இந்த விபத்தில் 32 பேர் படுகாய மடைந்தனர். சென்னை துரைப் பாக்கம் ஆறுமுகம் மனைவி பழனியம்மாள்(50), சென்னை மதுரவாயல் ராஜ்குமார் மனைவி ஜெயக்குமாரி(50), திருக்கோயிலூர் மெய்யூர் விக்னேஷ்(21), விழுப்புரம் கொத்தமங்கலம் செந்தில்(38), விக்கிரவாண்டி ராஜ்குமார், ஆத்தூர் அண்ணாமலை(42), திண்டி வனம் பாஸ்கரன்(52), விழுப்புரம் அய்யனார்(45), சாமுவேல், சென்னை லட்சுமி(45), தலைவாசல் கதிர்வேல், கள்ளக்குறிச்சி மாரி(50), பிரேமா(50) நங்கநல்லூர் முரளி, நெற்குன்றம் ரவிச்சந்திரன்(42), அரும்பாக்கம் லெட்சுமி(45), பல்லடம் தங்கவேல்(47), எலி யாத்தூர் மாரியப்ப பிள்ளை(50), விழுப்புரம் சந்திரன்(41), செந்தில்(33), வழுதரெட்டி வனிதா(30), அரக்கோணம் முரளி(45), சேலம் மோகன்ராஜ்(14), திருக்கோவிலூர் ஜனார்த் தனன்(18), உளுந்தூர்பேட்டை முருகவேல்(64), செந்தாமரை(50), திண்டிவனம் ஜனார்த்தனன்(24), ஜெயக்குமார்(54), கச்சிராபாளை யம் சியமதா(19), வானூர் ஜெய பாலன்(45), சென்னை பீட்டர்ஸ் காலனி நமச்சிவாயம், ஆவடி ஜோதி(36), சேலம் மணிகண்டன்(15), மற்றும் பேருந்து ஓட்டுநர் ரகோத்தமன்(47) உள்ளிட்ட 32 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், எஸ்பி நரேந்திரன் நாயர், கோட்டாட்சியர் ஜீனத்பானு உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். தொடர்ந்து, ஆட்சியர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களின் விவரங்களைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினர். விக்கிரவாண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

33 mins ago

விளையாட்டு

35 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்