சசிகலாவுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு

By செய்திப்பிரிவு

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்ய தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, விடுமுறை கால நீதி மன்றத்தில் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்.

ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் இடைக்கால மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தது. அப்போது, சசிகலா புஷ்பா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்துள்ளனர். நாங்கள் அவரை பொதுச்செயலாளராக தேர்வு செய்யக்கூடாது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளோம்.

அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இப்போது அதே வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளனர். இது சட்டவிரோதம். எனவே, இதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்த வழக்கை இப்போது அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என கோரினார்.

அந்தக் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்