கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் நிலையங்களில் விரைவில் துரித உணவகங்கள் திறப்பு: நியாய விலையில் சைவ, அசைவ உணவுகள் கிடைக்கும்

By டி.செல்வகுமார்

சென்னை கடற்கரை, வேளச்சேரி, திருவான்மியூர், மயிலாப்பூர் ஆகிய 4 பறக்கும் ரயில் நிலையங்களில் உணவகம் (ஃபுட் பிளாஸா), துரித உணவகம் (ஃபாஸ்ட் ஃபுட் யூனிட்) விரைவில் திறக்கப்பட உள்ளன. இங்கு சைவ, அசைவ உணவு வகைகள் நியாயமான விலையில் கிடைக்கும் என்று ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறினர்.

சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்பாதையில் கடற்கரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உணவகம் (ஃபுட் பிளாஸா), துரித உணவகம் (ஃபாஸ்ட் ஃபுட் யூனிட்) திறக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடற்கரை, திருவான் மியூர், மயிலாப்பூர் ஆகிய 3 பறக் கும் ரயில் நிலையங்களில் உண வகங்கள் அமைக்க ரயில்வே நிர்வாகத்திடம் இந்தியன் ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு அனுமதி கோரியது.

அந்த அனுமதி கிடைத்ததும் மேற்கண்ட ரயில் நிலையங்களில் 2,000 முதல் 4,000 சதுர அடி வரை யிலான இடத்தில் பெரிய அளவில் உணவகம் அமைத்து நடத்துவதற் கான ஓராண்டு உரிமக் கட்டணம் மிக அதிகமாக ரூ.60 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டது. யாரும் முன் வராததால், அத்திட்டம் கைவிடப் பட்டது.

ஐஆர்சிடிசிக்கு அனுமதி

இந்நிலையில், குறைந்த சதுர அடி பரப்பில், குறைவான உரிமக் கட்டணத்துடன் துரித உணவகம், உணவகங்கள் நடத்த ரயில்வே நிர்வாகத்திடம் ஐஆர்சிடிசி மீண்டும் அனுமதி கோரியது. அதற்கு இப்போது அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி, கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையங்களில் உணவகங்களும் (ஃபுட் பிளாஸா), திருவான்மியூர், மயிலாப்பூர் பறக் கும் ரயில் நிலையங்களில் துரித உணவகங்களும் (ஃபாஸ்ட் ஃபுட் யூனிட்) திறக்கப்பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி விண்ணப் பித்தவர்களில் தகுதியானவர்கள் ஜனவரி 6-ம் தேதி இறுதி செய்யப் படுகின்றனர்.

இடம் ஒதுக்கீடு

இதுகுறித்து ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

உணவகம் அமைக்க கடற்கரை ரயில் நிலையத்தில் 1,400 சதுர அடி, வேளச்சேரி ரயில் நிலையத் தில் 1,465 சதுர அடி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. துரித உணவகம் அமைக்க மயிலாப்பூர் ரயில் நிலை யத்தில் 620 சதுர அடி, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் 850 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உணவகம் நடத்த 9 ஆண்டுகள் வரை உரிமம் வழங்கப்படும். தேவைப்பட்டால் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். துரித உணவ கத்துக்கு 5 ஆண்டுகள் வரை உரிமம் வழங்கப்படும். உணவகத் துக்கான ஓராண்டு உரிமக் கட்ட ணம் கடற்கரைக்கு ரூ.65 லட்சம், வேளச்சேரிக்கு ரூ.40 லட்சம், துரித உணவகத்துக்கான கட்டணம் திருவான்மியூர், மயிலாப்பூருக்கு ரூ.20 லட்சம் என நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

உணவகம் நடத்துவதில் குறைந் தது 2 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓர் உணவகமாவது தற்போது நடத் திக்கொண்டிருக்க வேண்டும் என் பது போன்ற தகுதிகள் உள்ளவர் களுக்கே உரிமம் வழங்கப்படும்.

கடற்கரை, திருவான்மியூர், மயிலாப்பூரில் வரும் ஏப்ரல் மாத மும், வேளச்சேரியில் மே அல்லது ஜூன் மாதமும் இவை திறக்கப்படும். பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் நேரங்களில் இவை திறந்திருக்கும். இங்கு சைவ, அசைவ உணவு வகைகள் நியாயமான விலையில் கிடைக்கும். கேரளாவில் வர்க் கலா, சங்கனாச்சேரி ரயில் நிலை யங்களிலும் துரித உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

55 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்