முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை விநியோகத்தில் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம்

By செய்திப்பிரிவு

முதலமைச்சரின் விரிவான மருத் துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்குவதில் தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது என ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித் துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தின் மூலம் ஏழை- எளிய மக்கள் 1,016 நோய்களுக்கு சிகிச்சையும் 113 தொடர் சிகிச் சைகளும் 23 அறிதல் கண்டு பிடிப்பு முறைகளும் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஊராட்சி தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவ பரி சோதனை செய்யப்பட்டு தேவைப்பட்டால் மேல் சிகிச் சையும் அளிக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 2012-ம் ஆண்டு முதல், கடந்த நவம்பர் 6-ம் தேதி வரை 81,454 பேர், பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை பெற் றுள்ளனர். இதற்காக ரூ.157.08 கோடி அரசு வழங்கியுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 6-ம் தேதி வரை 7,48,436 பேருக்கு முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்குவதில் தமிழகத் திலேயே திருவள்ளூர் மாவட்டம் தான் முதல் இடம் வகிக்கிறது.

மேலும், மாவட்டத்தில் இனி யும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெறாதவர் கள், மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் செயல்படும் முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்