என்சிசி 75-வது ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் நடந்த முகாமில் மாணவர் உட்பட 500 பேர் ரத்த தானம்

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய மாணவர் படையின் (என்சிசி) 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை பிரஸ்டீஜ், என்சிசி (சென்னை) சார்பில் சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் நேற்று மாபெரும் ரத்த தான முகாம் நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

அமைச்சர் மா.சுப்பிரமணியன் (காணொலியில்): ரத்ததானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகவிளங்குகிறது. ரத்ததான முகாமை முன்னெடுத்து சிறப்பாக நடத்தும் ரோட்டரி சங்கத்துக்கு பாராட்டுகள். என்சிசியின் சேவை நூற்றாண்டை கடந்து சிறப்பாக தொடர வாழ்த்துகள்.

லெப்டினென்ட் கர்னல் சாமுவேல் ஜெ.பிரேம்குமார்: என்சிசியின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஓராண்டுக்கு சிறப்புநிகழ்ச்சிகள் நடத்த என்சிசி தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போதுமாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, 2023நவ.27-ம் தேதி வரை சமூக சேவைகள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும்.

கர்னல் ஜர்னயில் சிங்: என்சிசி படையினர் மிகுந்த ஆர்வத்தோடு ரத்ததானம் செய்வது மகிழ்ச்சி. என்சிசியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று, சேவை செய்ய வேண்டும். ரோட்டரி சங்க நிர்வாகி கே.பி.விஜயகுமார்: இந்த முகாமில் பெறப்படும் ரத்தத்தை சென்னையின் 4 ரத்த வங்கிகள், திருவண்ணாமலையில் உள்ள ஒரு ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முகாமில், 60-க்கும் மேற்பட்டபள்ளி, கல்லூரிகளின் மாணவர்கள், என்சிசி படையினர், அரசு அதிகாரிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

வாழ்வியல்

57 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்