தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி சோ- அன்புமணி புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

தமிழக அரசியலிலும், திரையுலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் சோ என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோவின் மறைவு குறித்து அன்புமணி இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தலைசிறந்த அரசியல் விமர்சகரும் துக்ளக் இதழாசிரியருமான சோ ராமசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழகத்தில் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் மிகவும் நெருக்கமாக விளங்கியவர் சோ ராமசாமி. தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றங்களுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார். எனினும், அரசியல் தலைவர்களிடம் தமக்காகவோ, தமது குடும்பத்தினருக்காகவோ எந்த கோரிக்கையையும் முன்வைத்ததில்லை.

அதுமட்டுமின்றி தமிழக அரசியல் தலைவர்களில் தொடங்கி அகில இந்திய தலைவர்கள் வரை யாராக இருந்தாலும், அவர்களின் தவறுகளை அவர்கள் முகத்துக்கு நேராகவே சுட்டிக்காட்டும் துணிச்சல் சோ ராமசாமிக்கு இருந்தது.

துக்ளக் இதழிலும், பிற இதழ்களிலும் சோ ராமசாமியின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை என்று கூறும் அளவுக்கு அனைவரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனாலும் அவரது விமர்சனங்கள் அனைத்தும் எல்லை மீறாமலும், கண்ணியத்துடனும் அமைந்திருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் அவர் ஆற்றும் உரை அந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் அரசியல் மாற்றங்களுக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கும். துக்ளக் விழாவில் அவரது உரைகள் அரசியல் பாடங்களாக அமைந்திருந்தன என்றால் அது மிகையல்ல.

கடந்த ஆண்டு துக்ளக் விழாவில் நானும் பங்கேற்க வேண்டும் என்று என்னை அழைத்து வாய்ப்பு வழங்கினார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாமகவின் முதல்வர் வேட்பாளர் என்ற முறையில் நான் முன்வைத்த திட்டங்களை வெகுவாக பாராட்டினார்.

தமிழக அரசியலிலும், திரையுலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய சோ ராமசாமியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், துக்ளக் பணியாளர்கள் ஆகியோருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்