திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க புதிய மையம்: இணையத்தில் பதிவேற்றலாம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் உள்ள மையத்தில், கணினி மூலம் கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படுகிறது. மற்ற நாட்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், செவ்வாய்க் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரையான நாட்களில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளிக்க ஏதுவாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத் தளத்தில் புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும் இந்த மையத்தில், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் கணினி மூலம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, ஒப்புகை ரசீது மனுதாரர்களுக்கு வழங்கப்படும். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்