வெற்று பரபரப்பு நம்மை திசை திருப்பும்: சிதம்பரம் வாசகர் திருவிழாவில் இயக்குநர் லிங்குசாமி கருத்து

By செய்திப்பிரிவு



வாசகர் திருவிழா 2016 | சிதம்பரம்

வெற்றுப் பரபரப்பு நாம் இயல்பாய் போகிற ஒரு போக்கை திசை திருப்பி விட்டுவிடும். இப்படி பரபரப்புக்காக செய்திகளை பெரிதுப்படுத்துபவர்களுக்கு இடையில் செய்தியைச் செய்தியாக மட்டுமே 'தி இந்து' தமிழ் நாளிதழ் வெளியிடுகிறது. இதில் உள்ள செய்திகளில் பரபரப்பைக் காட்டிலும், சமூகத்தின் மீதான அக்கறையே மையக்கருத்தாக கொண்டிருக்கிறது என்று சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற 'தி இந்து' வாசகர் திருவிழாவில் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்தார்.

'தி இந்து' தமிழ் நாளிதழ் 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி வாசகர்களின் எண்ண ஓட்டங் களை அறிய, அவர்களோடு கைகோர்த்து ஊர்கள் தோறும் வாசகர் திருவிழா நடத்தப் பட்டு வருகின்றன. இந்தாண்டு ஓசூர், புதுக் கோட்டை, காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து நேற்று சிதம்பரத்தில் வாசகர் திருவிழா நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை யரங்கில் நிர்மலா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது விழா.

கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி வாசகர்களுக்கான 'தி இந்து' வாசகர் திருவிழா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலையரங்கில் நேற்று நடைபெற்றது. அரங்கம் நிறைந்த இந்தக் கொண்டாட்ட கூட்டத்தின் ஒரு பகுதி. | படங்கள்: எம்.சாம்ராஜ்

லைமைச் செய்தியாளர் தேவதாசன் வரவேற்புரையாற்றினார். 'தி இந்து' முதுநிலை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்கினார்.

விழாவில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, தொலைக்காட்சி நெறியாளர் கோபிநாத், எழுத்தாளர் போப்பு ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி பேசியது:

பள்ளிப் பருவத்தில் எங்களது மளிகைக் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும் போது, மளிகைப் பொருட்களை பொட்டலம் மடிப்பதற்காக பழைய வார இதழ்களை, பத்திரிகைகளை எடுத்துப் படிப்பது வழக்கம். அப்படித்தான் எனது வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

நமக்குள்ளே உண்மையில் ஒருவித பரபரப்போ, உண்மையான ஒரு மாற்றமோ நடக்காத போதுதான் ஒருவன் பரபரப்பான ஒரு செய்திக்கு ஏங்குகிறான். இளையராஜா மிகமிக பரபரப்பாக இயங்கிய காலகட்டங்களில் செய்தித்தாளே படிப்பது கிடையாதாம். செய்தியே கேட்க மாட்டாராம்.

நான்கூட சில சமயங்களில் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குள் பேப்பர் வராம இருந்தா நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. இந்த வெற்றுப் பரபரப்பு நாம் இயல்பாய் போகிற ஒரு போக்கை திசை திருப்பி விட்டுவிடும். இப்படி பரபரப்புக்காக செய்தி களை பெரிதுப்படுத்துபவர்களுக்கு இடையில் செய்தியைச் செய்தியாக மட்டுமே 'தி இந்து' தமிழ் வெளியிடுகிறது.

இதில் உள்ள செய்திகளில் பரபரப்பைக் காட்டிலும், சமூகத்தின் மீதான அக்கறையே மையக்கருத்தாக கொண்டிருக்கிறது. எதையும் மிகைப் படுத்தாமல் உண்மையான செய்தியை வெளியிடுவதில் 'தி இந்து' தமிழ் நாளிதழ் தனித்துவமாக திகழ்கிறது. இதில் வெளிவரும் திரைப்படம் தொடர்பான கட்டுரைகள் தரமாக உள்ளன. 'தி இந்து' தமிழ் நாளிதழின் இணைப்பு இதழ்களான வணிக வீதி, 2-ம் பக்கத்தில் வரும் சாதனையாளர்களின் தகவல்கள், இந்து டாக்கீஸ் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை.

நான் திரைப்படங்களை டிவிடியிலோ அல்லது அலுவலகத்திலோ பார்ப்பதில்லை. திரையரங்குக்குச் சென்று மக்களோடு மக்களாக பார்க்கிறேன். இப்படி மக்களைச் சந்திப்பதன் மூலம் ரசிகனின் எண்ணங் களையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற வாசகர் திருவிழாக்கள் மூலம் உங்களின் எண்ண ஓட்டங்களை நாங்களும் புரிந்து கொள்ள முடிகிறது. அதன்மூலம் நாங்கள் எங்களை மெருகேற்றிக் கொள்கிறோம். வாசகர்களாகிய உங்களிடம் இருந்துதான் பல விஷயங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படியாக வாசகர்களின் பங்களிப்போடு இயங்குவதால்தான் 'தி இந்து' தமிழ் நாளிதழ் வெற்றி நடைபோடுகிறது என்று கூறினார்.

இந்த விழாவை 'தி இந்து'வுடன் இணைந்து லலிதா ஜுவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், ஐடியா செல்லுலார், டாக்டர் துரை கிருஷ்ணமூர்த்தி நினைவு தில்லை மருத்துவமனை, ஜேவிசி குழுமம், கேசினோ குழுமத்தின் ஆறாம் திணை - சைவ உணவகம் சிதம்பரம் ஆகியவை வழங்கின.

விழாவில் 'தி இந்து' வர்த்தகப் பிரிவு மேலாளர் ஷங்கர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிதம்பரம் ஜெயம் கேபிள் நெட் ஒர்க் நிறுவனத்தார் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

அடுத்த வாசகர் திருவிழா டிசம்பர் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்