செய்திகளை முழுமையாக படித்து பிரேமலதா பதில் அளிக்க வேண்டும்: மதுரையில் வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவிந்தராஜன், அழகேசன், ராஜா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மீத்தேன், கெயில் திட்டங்களால் டெல்டா மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணையைக் கட்டினால் தமிழ்நாட்டில் பஞ்சம், பட்டினி உருவாகும். கெயில் காஸ் பைப் லைனுக்கு எதிரான வழக்கு வருகிற 15-ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், அதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா மீது மதிப்பும், மரி யாதையும் வைத்திருந்தேன். அவர் பத்திரிகைகளில் வந்த சில தலைப்புச் செய்திகளை நன்கு படிக்காமல் பதில் கூறியுள்ளார். முழுமையாக படித்துப் பார்த்து பதில் கூறவேண்டும். தேர்தல் கூட்டணிக்காக விஜயகாந்தை தேடிப் போனது உண்மை. அவர் மீதான நன்மதிப்பின் காரண மாகவே, அவரது பிறந்தநாளை யொட்டி தேடிச் சென்று நேரில் வாழ்த்துத் தெரிவித்தேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

25 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

33 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

39 mins ago

ஆன்மிகம்

49 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்