டாஸ்மாக் திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்கலாமா? - அரசு பதில் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கலாமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்தும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிடக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர தரப்பில் மாணவர்கள் மது அருந்தும் புதிய புகைப்படங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து நீதிபதிகள், "இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை. இதனை தீவிரமாக அணுக வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறக்கும் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு தெரிவிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்