தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மத்திய இணையமைச்சர் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்டஅமலாக்கத் துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் நேற்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர்,சென்னை மாநகராட்சி இணை ஆணையர் சங்கர்லால் குமாவட் ஆகியோர் பங்கேற்று மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அலுவலர்களும் பங்கேற்றனர்.

புள்ளியியல் அமைப்பு: இதைத் தொடர்ந்து, தேசிய புள்ளியியல் அமைப்பின் தமிழ்நாடு மண்டல அதிகாரிகளுடன் பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் ஆலோசனை நடத்தினார்.இந்த அமைப்பின் துணைத் தலைமை இயக்குநரும், மண்டல அதிகாரியுமான பி.டி.சுபா, பெங்களூருவில் உள்ள தென் மண்டல அலுவலகத்தின் துணைத் தலைமை இயக்குநர் ஆர். மனோகர் உள்ளிட்ட அதிகாரிகள் தேசியபுள்ளியியல் அமைப்பின் தமிழ்நாடுமண்டல பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்