அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் தற்கொலைக்கு நிர்பந்தம் காரணமா?- சிபிசிஐடி விசாரிக்க அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் தற்கொலை செய்துகொண்டதற்கு ஒப்பந்ததாரர்கள், ஆளும் கட்சியினர் அளித்த நிர்பந்தம் காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வரு கின்றனர். அரசியல் ரீதியாக நெருக்கடி தரப்படுவதை தவிர்க்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என நகராட்சி ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்தவர் முத்துவெங்கடேஸ்வரன்(52). இவர், நேற்று முன்தினம் அருப்புக்கோட்டை யில் உள்ள அரசு வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் துறை மற்றும் நகராட்சி தரப்பில் கூறப்படுவதாவது:

நகராட்சியில் ஒரு கோடி ரூபாய்க் கும் அதிக மதிப்பில் வேலை முடிக்கப் பட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதைக் கேட்டு ஆணையாளருக்கு நெருக்கடி கொடுக் கப்பட்டுள்ளது. ஒரு ஒப்பந்ததாரர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் நிர்பந்தம் காரணமாக நகராட்சி பொது நிதி உள்ளிட்ட வேறு நிதியில் இருந்து ஒப்பந்ததாரர்கள் சிலருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இதை நகராட்சியின் மண்டல இயக்குநர் கண்டித்துள்ளார். தேர்தல் செலவுக்காக ஆளும் கட்சியினர் யாரும் பணம் கேட்டார்களா, குடும்பப் பிரச்சினை ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரணை முடிவில்தான் தெரியும்.

இந்நிலையில், இந்தத் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரக அனைத்து ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒப்பந்ததாரர்கள் கொடுத்த அழுத்தம், சில அரசியல் நிர்பந்தம் ஆகியவை இந்தத் துயர முடிவுக்கு ஆணையாளரை தள்ளியுள்ளதாகத் தெரிகிறது. அரசியல் நிர்பந்தத்தால் பட்ஜெட்டுக்கு மீறி பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவது மாநிலம் முழுவதிலும் உள்ள நிலைமை. மாவட்ட ஆளும் கட்சி முக்கிய பிரமுகர்கள் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதால் நிதி ஒழுங்கீனத்துக்குக் காரணமாகிறது. ஆளும் கட்சியின் தலையீடு தொடர்ந் தால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்