எல்பிஜி விநியோகஸ்தராக நியமிப்பதாக போலி வாக்குறுதி அளிக்கும் ஏஜென்சிகள்: இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சில மோசடி நபர்கள் மற்றும் ஏஜென்சிகள் பொதுமக்களிடம் எல்பிஜி விநியோகஸ்தராக நியமித்து தொழில் வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள தாவது:

சில மோசடி நபர்கள் மற்றும் ஏஜென்சிகள் பொதுமக்களிடம் எல்பிஜி விநியோகஸ்தராக நியமித்து தொழில் வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி நாளிதழ்களில் விளம்பரம் செய்தும், தொலைபேசி மூலம் நேர்காணல் நடத்தியும் அவர்களை ஏமாற்றி வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதன்படி, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் ராஜீவ்காந்தி கிராமிய எல்பிஜி விதாரக் யோஜனா திட்டத்தின் கீழ், எல்பிஜி கேஸ் விநி யோகஸ்தராக ஆகும் வாய்ப்பை வழங்குவதாக அவர்கள் கூறி வருகின்றனர். உண்மையில், மேற்கண்ட திட்டங்களின் கீழ் எல்பிஜி விநியோகஸ்தர் வாய்ப்பு ஏதும் வழங்கப்படுவதில்லை.

மேலும், இந்த மோசடி நபர்கள் மேற்கண்ட திட்டங்களின் பெயரில் போலியான இணையதள பக் கங்களை உருவாக்கி அதில் பிரதமரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய் துள்ளனர். அத்துடன் இந்த மோசடி நபர்கள் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியன் ஆயில் நிறுவனம் எல்பிஜி விநியோகஸ்தர்களை நியமனம் செய்ய விரும்பினால் அது குறித்து முன்னணி நாளிதழ் களில் முறைப்படி விளம்பரம் செய்யப்படும். அத்துடன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதள பக்கத்திலும் அறிவிப்பு வெளி யிட்டு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவர். எல்பிஜி விநியோகஸ்தர்களை நியமிக்க வும், தேர்வு செய்யவும் வேண்டி இந்தியன் ஆயில் நிறுவனம் எந்த ஏஜென்சியையும், நபரையும் நியமிக்கவில்லை.

எனவே பொதுமக்கள் இத் தகைய மோசடி நபர்களிடம் சிக்கி ஏமாறாமல் இருக்க வேண்டும். அத்துடன், இத்தகைய மோசடி நபர் களிடம் பணம் கொடுத்து ஏமாந் தால் அதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப் பேற்காது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்