ராஜராஜ சோழன் 1031-வது சதய விழா: தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

மாமன்னன் ராஜராஜ சோழன் அரியணை ஏறியதன் 1031-ம் ஆண்டு சதய விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் இன்றும் நாளையும் (நவ.8, 9) நடைபெறு கிறது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இன்று காலை 9.30 மணிக்கு களிமேடு அப்பர் அவையினரின் திருமுறை அரங்கம் நடைபெறு கிறது. காலை 10 மணிக்கு தொடங் கும் மேடை நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணா துரை தலைமை வகிக்கிறார். அரண் மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே, தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் எ.நா.சஜித், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி.குமரதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கருத்தரங்கம்

முற்பகல் 11 மணிக்கு தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் க.பாஸ்கரன் தலைமையில் ‘மாமன் னன் ராஜராஜன்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நாத இசைச் சங்கமம், மாலை 4.30 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு திருமுறை இசை அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மாலை 6 மணிக்கு, ‘மாமன்னன் ராஜராஜன் போற்றிய சமயம்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு கவிஞர் அரு.நாகப்பன், சரஸ்வதி நாகப்பனின் நகைச்சுவை இன்னி சைப் பட்டிமன்றம், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு திருப்பதி வாணி யல்லா குழுவினரின் வாத்ய சம்மேளனம் நடைபெறுகிறது.

சதய விழாவில் நாளை

காலை 7.30 மணிக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், காலை 8 மணிக்கு ராஜ வீதிகளில் ‘திருமுறைத் திருவீதி உலா’, காலை 9 மணிக்கு பெருவுடையார் - பெரியநாயகி திருமேனிகளுக்கு பேரபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது.

பட்டிமன்றம்

மாலை 4 மணிக்கு தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றத்தினரின் தேவார இசை அரங்கமும், 5 மணிக்கு, முனைவர் கோ.தெய்வநாயகம் எழுதிய ‘ ராஜராஜுஸ்வரம்’ நூல் வெளியீடு நடைபெறுகிறது.

மாலை 5.15 மணிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ.ப.நல்லசிவம் குழுவினரின் திருமுறை இசையரங்கம், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இன்னிசைப் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மா.வீரசண்முகமணி தலைமையில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முடிசூடியதன் 1031-வது ஆண்டு விழா

சோழப் பேரரசன் ராஜராஜன் கி.பி.985-ல் அரியணையில் அமர்ந்து, கி.பி.1014 வரை ஆட்சிபுரிந்து தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தவர். உலகமே வியக்கும் ராஜராஜேச்சுரம் எனும் பெருவுடையார் கோயிலை கட்டியவர். ஐப்பசி சதய நாளில் பிறந்த ராஜராஜன், சேர நாட்டை வெற்றி கொண்டபோது, அங்கு சதய நாளில் திருவிழா கொண்டாடச் செய்தார் என்பதை கலிங்கத்துப் பரணி, ‘சதயநாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன்’ எனக் கூறுகிறது. மன்னன் ராஜராஜனின் சதயப் பெருவிழா என்பது அவர் முடிசூடியதன் 1031-வது ஆண்டு விழாவாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்