நீட் தேசிய தரவரிசையில் முதல் 200 இடங்களில் சென்னை ஆகாஷ் பைஜு மையத்தின் 2 மாணவர்கள் இடம் பெற்று சாதனை

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவம், பொறியியல், பள்ளி, போர்டு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் சேவையில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் 200-க்கும்அதிகமான பயிற்சி மையங்களுடன், 2.50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஆகாஷ் பைஜு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்ற 2 பேர் தேசிய அளவிலான தேர்வுப்பட்டியலில் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். பி.ஹரிணி தேசிய அளவில் 126-வது இடமும், ரினித் ரவிச்சந்திரன் 150-வது இடமும் பெற்றுள்ளனர்.

'பாடத்திட்ட கருத்தாக்கங்களை புரிந்துகொள்வதில் காட்டிய முயற்சி, கற்றல் கால அட்டவணையை சரியாக பின்பற்றியது ஆகியவையே இந்த சிறப்பிடத்தைப் பெற காரணம்' என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறப்பாக தேர்ச்சி பெற்ற இம்மாணவர்களைப் பாராட்டிய ஆகாஷ் பைஜு மேலாண்மை இயக்குநர் ஆகாஷ் சவுத்ரி கூறும்போது, "நீட் 2022 தேர்வில் 16 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

எங்கள் மாணவர்களின் சாதனை அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வையும், அவர்களது பெற்றோரின் ஆதரவையும் சுட்டிக்காட்டுகிறது. எங்கள் மாணவர்களுக்கு எப்போதும் எமது சேவை கிடைப்பதற்காக எங்கள் டிஜிட்டல் செயலிருப்பை உயர்த்தினோம்.

பாடப் பகுதிகள், வினா வங்கிகளை ஆன்லைனில் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தோம். தேர்வுக்கு தயாராக மெய்நிகர் முறையில் பல உத்வேகமளிக்கும் அமர்வுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தினோம். நேர மேலாண்மைக்கான திறன்களையும் நாங்கள் கற்பித்தோம். எங்களின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

17 mins ago

தமிழகம்

54 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்