வீடுகளுக்கு இணையதள இணைப்பு: இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் அரசு கேபிள் நிறுவனம்- வங்கிக்கடன் பெற்றுத்தரவும் திட்டம்

By கி.கணேஷ்

தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் இணையதள இணைப்பு வழங்கும் திட்டத்தில், இளைஞர்களைத் தொழில்முனைவோராக்கும் முயற்சியில் அரசு கேபிள் டிவி நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்கு வங்கிக்கடன் வசதியையும் செய்துதர திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் அரசு கேபிள் டிவி நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தமிழகம் முழுவதும் 73 லட்சம் கேபிள் இணைப்புகள் உள்ளன. அரசு கேபிள் டிவி நிறுவனம் கேபிள் இணைப்புகள் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலகங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து, அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளிடம் இருந்து வழங்கப்படும் சான்றுகள், அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு வழங் குதல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் கூடுதலாக, ஆதார் பதிவுக்கான வசதியையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது தனியார் இணைய சேவை நிறு வனங்களுக்குப் போட்டியாக அரசு கேபிள் டிவி நிறுவனமும் பொது மக்களுக்கு இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தில் இறங்கியுள் ளது. இதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி வெளி யிட்டு, தனியாரான ‘வோடபோன்’ நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உயர்நிலை இணைப்பைப் பெற்று பொதுமக்களுக்கு வழங்குகிறது.

இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்வர் அரசு கேபிள் டிவியின் இணைய இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைக்கும் முன்னரே, நாங்கள் இதற்கான பணிகளில் இறங்கி, ஆயிரத்து 300 இணைப்புகளைக் கைவசம் வைத்திருந்தோம். இதற் கான தொலைத்தொடர்பு அனு மதியும் முறையாக பெறப்பட்டுள் ளது.

முதலில், அரசு கேபிள் நிறுவன ஆபரேட்டர்கள் மூலம் இத்திட்டத் தைச் செயல்படுத்த முயற்சி எடுத் தோம். அவர்கள் முதலில் இத்திட் டத்துக்கான பைபர் ஆப்டிக்கல் கேபிள், இணைய இணைப்பை பிரித்தளிக்கும் தளவாடப் பொருட்களை வாங்க வேண்டும். அதற்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், ஆபரேட்டரின் அலுவ லகம் வரையிலான இணைப்பை அரசு கேபிள் டிவி நிறுவனமே சொந்த செலவில் வழங்கும் என தெரிவித்திருந்தோம். அதன்படி 32 பேர் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்து, பொதுமக்களுக்கு இணையதள இணைப்புகளை வழங்கினர்.

அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனால், திட்டத்தை முழுமை யாக செயல்படுத்த முடியவில்லை. தேர்தல் முடிந்து மீண்டும் அரசு பொறுப்பேற்றதும், பணிகளைத் தொடங்கினோம். தொடர் முதலீடு, ஆட்கள் நியமனம் போன்றவற்றால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சிரமம் இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்தே, தொழில் முனைவோராக முயற்சிக்கும் இளை ஞர்கள் மூலம் இத் திட்டத்தைத் செயல்படுத்த முடி வெடுத்தோம். தற்போது இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது டன், தொழில்முனைவோர் மேம் பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் கைகோர்த்துள் ளோம். இத்திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிக்கடன் ஏற்பாடும் செய்ய முடிவெடுத்துள்ளோம். இத்திட்டத் தில் இணைபவருக்கு பொதுமக் களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத் தொகையில் 46 சதவீதம் வழங்கப்படும்.

தற்போது இத்திட்டத்தில் சேர 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் நாங்கள் பேசி வரு கிறோம். மத்திய அரசின் வட்டார அளவிலான இணையதள திட்டத் தைத் தமிழக அரசு செயல்படுத் தும் என முதல்வர் ஏற்கெனவே கடந்த ஆண்டு அறிவித் திருந்தார் . அத்திட்டத்துக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதற்கு முன் னோடியாக, தற்போது தமிழக அரசே இத்திட்டத்தைச் செயல்படுத் துகிறது. திட்டத்தில் இணையவும், இணைப்புக்காக வும், பழுது தொடர்பான தகவல் களுக்கும் ‘18004252911’ என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இணைப்பு பெற்றவர்கள் ஆன் லைன் மூலம் கட்டணம் செலுத் தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தைப் பொறுத்தவரையில், மாதம் ரூ.299 முதல் ரூ.1,349 மாத கட்டண அடிப்ப டையில், இணைய வேகத்துக்கு ஏற்றவகையில் திட்டங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. இக்கட்டணம் தவிர, கூடுதல் வரிகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை என்பதால் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இணையதள இணைப்பு குறித்து, கேபிள்டிவி தொழில்நுட் பப் பிரிவு நிபுணர் கூறும்போது, ‘‘அரசு இணையதள இணைப்பைப் பொறுத்தவரை, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. வாடிக்கையாளர்களின் வீட்டு இணைப்பில் உள்ள தொ ழில்நுட்ப கோளாறுகளை, இங்கு இருந்தபடியே சீரமைக்க முடியும். தற்போது அதற்குத் தேவையான ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இணைப்பு அறுபட்டிருந்தால் மட்டுமே, வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதி முகவரை அணுக வேண்டிவரும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

9 mins ago

இந்தியா

45 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்