தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் 24-ம் தேதி வரை பதவியில் நீடிக்கலாம்

By பி.டி.ரவிச்சந்திரன்

தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதால், உள்ளாட்சி பிரதிநிதிகள் வருகிற 24-ம் தேதி வரை பதவியில் நீடிக்க உள்ளனர். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து வெளியே சென்றவர்கள் தற்போது மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.

கடந்த உள்ளாட்சித் தேர்தல் 2011-ம் ஆண்டு அக்டோபரில் நடை பெற்றது. தேர்தல் முடிந்து தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் அக்டோபர் 25-ம் தேதி காலையில் பதவி ஏற்றனர். இதனால் இவர்களின் 5 ஆண்டு பதவிக் காலம் அக்டோபர் 24 மாலை வரை உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 25-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்ததையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

உள்ளாட்சி பிரதிநிதிகளான மேயர், நகராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், பேரூராட்சித் தலைவர் என அவர்கள் பயன் படுத்திய அரசு வாகனங்கள் திரும் பப் பெறப்பட்டன. இவர்கள் பயன் படுத்திய அரசு அலுவலக அறை களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் முறை யீடு செய்துள்ள வழக்கு நிலு வையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை உள் ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி பிரதி நிதிகளின் நிலை என்ன என்பது குறித்து பலருக்கு குழப்பம் ஏற்பட் டுள்ளது. தங்கள் பதவிக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது என்ற எண்ணத்தில் பலர் இருந்தனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது:

கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி காலையில்தான் தற்போது உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்றனர். இவர் களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி மாலையில் தான் முடிவடைகிறது.

மேயர், ஒன்றியத் தலைவர்கள், நகராட்சித் தலைவர் அவர்களின் வழக்கமான பணியைத் தொடர லாம். இதில் எந்த மாற்றமும் இருக் காது. இதனால் அவர்களிடம் கார்கள், அலுவலக சாவி ஆகிய வற்றை திரும்ப வழங்கியுள்ளோம்.

இதை அவர்கள் அக்டோபர் 24 மாலை வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் பின்பே தனி அதிகாரிகளை அரசு நியமிக்கும். அவர்களுக்கு உள்ளாட்சிப் பிரதி நிதிகளின் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளாட்சிப் பணிகளும் தொடரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

1 min ago

வாழ்வியல்

2 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

26 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்