மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு: சென்னை வந்த இல.கணேசனுக்கு வரவேற்பு

By செய்திப்பிரிவு

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நேற்று சென்னை திரும்பிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் மத்தியப் பிரதேசத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடந்த செப்டம்பர் 29-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இல.கணேசனைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து எம்.பி.யாக தேர்வு செய்யப் பட்டதற்கான சான்றிதழை நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு நேற்று மதியம் அவர் சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் டால்பின் தர் உள்ளிட்டோர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

க்ரைம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்