கருணாநிதியுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று மாலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி, திமுகவின் தென் மண்டல அமைப்புச் செய லாளராக இருந்து வந்தார். உட்கட்சிப் பூசல் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு கட்சியிலிருந்து அழகிரியை நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

எனினும், ‘‘தனது கட்சி திமுக என்றும், தனது தலைவர் கருணாநிதி மட்டுமே’’ என்று மு.க.அழகிரி கூறி வந்தார். ஆனாலும், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது, ‘‘தேர் தலில் திமுக தோற்கும்’’ என்று அழகிரி அதிரடியாகக் கூறினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்தபோதும் அழகிரி திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சமீபத்தில் பேட்டியளித்த கருணாநிதி, ‘‘மு.க.ஸ்டாலின்தான் எனது அரசி யல் வாரிசு. திமுகவில் இல்லாத அழகிரியை நினைத்து ஏங்க வில்லை’’ என்று கூறியது பர பரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, ஒவ்வாமை காரணமாக கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்து வர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வெடுத்து வருகிறார். கருணா நிதிக்கும் அழகிரிக்குமான இடை வெளி அதிகமானதாக சொல்லப் பட்ட நிலையில், நேற்று மாலை கருணாநிதியை அழகிரி சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

கோபாலபுரத்தில் உள்ள கரு ணாநிதியின் இல்லத்துக்கு அழ கிரியும், அவரது மகன் துரை தயாநிதியும் நேற்று மாலை 5.30 மணியளவில் சென்றனர். அங்கு கருணாநிதியிடம் அவர்கள் உடல்நலம் விசாரித்தனர். அழகிரி தனது தாயார் தயாளு அம்மாளை யும் சந்தித்து பேசினார். கரு ணாநிதியின் கோபாலபுரம் இல்லத் தில் அழகிரி சுமார் அரை மணி நேரம் இருந்தார்.

அப்பாவை சந்தித்தால் தப்பா?

இந்த சந்திப்பு தொடர்பாக மு.க.அழகிரியிடம் கேட்டபோது, ‘‘எனது அப்பாவை நான் அடிக்கடி சந்திக்கிறேன். அப்பாவை சந்தித் தால் கூட தப்பா? அவரது உடல் நலம் விசாரித்தேன். வேறு ஒன்றும் விஷயம் கிடையாது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

17 mins ago

க்ரைம்

23 mins ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்