செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்த முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவமணியுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் வாசித்தார்.

சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்புப் பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர்.

சிவமணி மேடையில் இருந்து கீழே வந்து முதல்வரை டிரம்ஸ் வாசிக்க அழைத்தார். இதை ஏற்றுக்கொண்டு மு.க.ஸ்டாலின், சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தார்.

நிறைவு விழாவைப் பார்க்க...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்