அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ் பறிமுதல்: 10 குழுக்கள் இன்றுமுதல் 31-ம் தேதி வரை ஆய்வு

By செய்திப்பிரிவு

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் மற்றும் விதிமீறல்கள் குறித்து 10 சிறப்பு குழுக்கள் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரையில் ஆய்வு நடத்துகிறது. அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல், விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடத்த 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை முன் னிட்டு ஆம்னி பஸ்களில் கட்ட ணத்தை உயர்த்தி ஆன்லைன் மூலம் வசூலிக்கும் முறை தொடங்கி யுள்ளது. இதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த முறையில் தமிழகத்தில் பதிவு செய்து இயக்கப்படும் 1200 ஆம்னி பஸ்கள் குறித்தும், பிற மாநிலங் களில் பதிவு செய்து தமிழகத்தில் இயக்கப்படும் 800 பஸ்களின் விவரங்கள் குறித்தும் முழு அறிக்கையை நாங்கள் தயாரித் துள்ளோம். இதில், சாதாரண நாட் களில் ஆம்னி பஸ்களில் வசூலித்த கட்டணம் உள்ளிட்டவற்றை நாங் கள் வைத்துள்ளோம். அதன்படி, நாங்கள் ஆய்வு நடத்துவோம். வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலித்தது உறுதி செய்தால், சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இதற்காக, 10 சிறப்பு குழுக் கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு குழுவிலும் ஒரு ஆர்டிஓ மற்றும் 5 வாகன ஆய்வாளர்கள் இருப்பார்கள். கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை, வண்ட லூர், பூந்தமல்லி, செங்குன்றம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நாளை (இன்று) முதல் வரும் 31-ம் தேதி வரையில் ஆய்வு நடத்து வோம். அதிக கட்டணம் வசூலித் தால் பயணிகளை பாதியில் இறக்கி விடாமல், சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ் சென்றடையும் இடத்தில் பறி முதல் செய்யப்படும். பொதுமக்கள் அதிக கட்டணம் குறித்து போக்கு வரத்து ஆணையர் அலுவலகத்தில் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு புகார் அளிக்க லாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

9 mins ago

இந்தியா

45 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்