கருணாநிதி நினைவு தினம் | திமுகவினர் அமைதி பேரணி: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை தொடர்ந்து சென்னையில் திமுகவினர் அமைதி பேரணி சென்றனர்.

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணியில் திமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் பேரணியில் அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். அமைதி பேரணியின் நிறைவில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

முதல்வரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளி வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

21 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

34 mins ago

உலகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்