பிரதமர் பதவி விலகக் கோரி கடலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி, நாகப்பட்டினத்தில் விவசாயிகள் நேற்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அனைத்து விவசாயிகள் கூட்டி யக்கம் மற்றும் காவிரி விவசாயி கள் பாதுகாப்புச் சங்கத்தின் சார் பில் அச்சங்கத்தின் பொதுச் செயலா ளர் தனபாலன் தலைமையில் நாகை யில் போராட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டும், நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி பதவி விலக வேண் டும். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டியக்கப் பொறுப்பாளர் ரவீந்திரன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ராஜினாமா செய்ய வேண்டும்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் பி.கே.தெய்வசிகா மணி ஈரோட்டில் கூறியதாவது: காவிரி பிரச்சினையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது.மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கும் வகையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் நாளை (6-ம் தேதி) சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

14 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்