முதல்வர் சுயநினைவோடு ரேகையை பதிவு செய்தார்: டாக்டர் பாலாஜி தகவல்

By சி.கண்ணன்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கைகளில் வலி இருப்பதால் பேனா பிடித்து கையெழுத்து போட முடியவில்லை. அதனால் அவர் பெருவிரல் ரேகையை பதிவு செய் தார். அவர் என்னிடம் நன்றாக பேசினார் என்று டாக்டர் பி.பாலாஜி தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவம்-ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வின் கையெழுத்து இல்லை. அவருடைய பெருவிரல் ரேகை மட்டும் பதிவு செய்யப்பட்டிருந் தது. முதல்வர் கையெழுத்து போடாமல், பெருவிரல் ரேகையை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பெருவிரல் ரேகையை வாங்கிய சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பி.பாலாஜி கூறியதாவது:

முதல்வரின் உடல்நிலை நன்றாக உள்ளது. எழுந்து உட் காருகிறார். நன்றாக பேசுகிறார். கை வழியாக மருந்துகள் செலுத் தப்படுவதால் கைகளில் வலி இருக்கிறது. அவரால் பேனாவைப் பிடித்து கையெழுத்துப் போட முடியவில்லை. அதனால்தான் அவர் பெருவிரல் ரேகையை வைத்தார். அவர் நன்றாக இருக்கிறார். நான் அவரிடம் பேசினேன். அவரும் என்னிடம் நன்றாக பேசினார். விரைவில் முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு டாக்டர் பி.பாலாஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்