2 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு - காரைக்கால் இடையே ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

By செய்திப்பிரிவு

காரைக்கால்- பெங்களூரு இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை, கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தபோது நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இரு மார்க்கத்திலும் 25-ம் தேதி (நேற்று) முதல் பயணிகள் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதன்படி, பெங்களூரு- காரைக்கால் ரயிலானது, பெங்களூருவில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு, ஓசூர் காலை 8.46, தருமபுரி காலை 10.24, சேலம் ஜங்ஷன் நண்பகல் 12.55, சேலம் டவுன் மதியம் 1.12, ஆத்தூர் மதியம் 2.14, தலைவாசல் மதியம் 2.31 மணி என விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் துறைமுகம், சிதம்பரம் வழியாக, காரைக்காலை இரவு 10.35 மணிக்குச் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் காரைக்காலில் காலை 5.30 மணிக்குப் புறப்படும் ரயிலானது, தலைவாசல் மதியம் 12.41, ஆத்தூர் மதியம் 12.58, சேலம் டவுன் மதியம் 1.57, சேலம் ஜங்ஷன் மதியம் 2.40, தருமபுரி மாலை 4.43, ஓசூர் 7.24 என பெங்களூருவை இரவு 9.30 மணிக்குச் சென்றடைகிறது.

ஓசூரில் வரவேற்பு

முன்னதாக, நேற்று காலை 8.46 மணிக்கு ஓசூர் ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலுக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் பூஜை செய்து வரவேற்று அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

கல்வி

21 mins ago

ஆன்மிகம்

38 mins ago

ஆன்மிகம்

46 mins ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்