எஸ்பிஐ வராக் கடன் | “கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு” - சு.வெங்கடேசன் எம்.பி 

By செய்திப்பிரிவு

சென்னை: எஸ்பிஐ வராக் கடன் தொடர்பான தகவலை குறிப்பிட்டு, "கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

எஸ்ஐபி வங்கியில் வராக் கடன் 19 ஆயிரம் கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "ஸ்டேட் வங்கியில் 8 ஆண்டுகளில் ரூ.1.45 லட்சம் கோடி வராக்கடன். வசூல் ஆனது ரூ.19,000 கோடி. மீதம் ஸ்வாஹா.. கட்டத்தவறியவர்களின் பெயர்கள் ரகசியமாம்.

கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்க கழுத்தில் துண்டைப் போடுவார்கள்... கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள்... இப்படியாக மக்கள் சேமிப்புகள் சூறை. கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" என்று அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

23 mins ago

இந்தியா

13 mins ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்