புதுச்சேரியில் 10-ம் வகுப்பில் 92.42% தேர்ச்சி; 4 மாணவிகள் முதலிடம்

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்களுடன் 4 மாணவிகள் முதலிடம் பிடித்தனர். தேர்ச்சி விகிதம் 92.42. கடந்த ஆண்டை விட 0.11 சதவீதம் அதிகம்.

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 17,752 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 16407 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 92.42 சதவீதம்.

4 மாணவிகள் முதலிடம்:

முதல் இடத்தை 4 மாணவிகள் பிடித்தனர். இதில் தமிழ் மொழிப்பாடத்தில் படித்த திருக்கனூர் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி கீர்த்தனா, பிரெஞ்சு மொழி பாடத்தை எடுத்து படித்த அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி பிரீத்தி, குளூனி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜூடி மெக்டலைன், வைஷ்ணவதேவி ஆகியோர் தலா 498 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.

இரண்டாம் இடத்தை 497 மதிப்பெண்கள் எடுத்து 18 பேரும், 3-ம் இடத்தை 13 பேர் 496 மதிப்பெண்கள் எடுத்தும் பிடித்தனர்.

அரசு பள்ளிகளில் தமிழ் மொழிபாடத்தில் 493 மதிப்பெண்கள் எடுத்து மதகடிப்பட்டுபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் சந்துரு முதலிடம் பிடித்தார். 484 மதிப்பெண்களுடன் சிந்து 2-ம் இடமும், 483 மதிப்பெண்ணுடன் காரைக்கால் நஸ்ரின் சுல்தானா 3-ம் இடமும் பிடித்தனர்.

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:

புதுச்சேரியில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.11 சதவீதம் உயர்ந்துள்ளது. புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்ச்சி விகிதம் 93.48. இது கடந்த ஆண்டை விட 0.58 சதவீதம் அதிகம். காரைக்கால் பகுதியில் 86.92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2..26 சதவீதம் குறைவு.

மொத்தமுள்ள 298 பள்ளிகளில் 135 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் 10 பள்ளிகள் அரசு பள்ளிகள். 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சியை 45 பள்ளிகள் பெற்றுள்ளன.

1841 பேர் நூற்றுக்கு நூறு:

புதுச்சேரி, காரைக்காலில் 1841 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் ஒருவர் கூட நூறு மதிப்பெண் எடுக்கவில்லை. பிரெஞ்சில் 72 பேரும், ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் 640 பேரும், அறிவியலில் 358 பேரும், சமூக அறிவியலில் 770 பேரும் என மொத்தம் 1841 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் மட்டும் 65 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

13 mins ago

சினிமா

17 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

21 mins ago

சினிமா

39 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்