அதானி குழுமத்திடம் சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல்: அரசு கருவூலத்துக்கு ரூ. 7,576 கோடி இழப்பா? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

By செய்திப்பிரிவு

அதானி குழுமத்திடம் சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்வ தால் அரசு கருவூலத்துக்கு ரூ. 7 ஆயிரத்து 576 கோடி இழப்பு ஏற்படும் என்பது உண்மையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

648 மெகாவாட் சூரிய ஒளி மின் சாரம் வாங்குவதற்காக அதானி நிறுவனத்துடன் தமிழக அரசு கடந்த ஜூலை 2015-ல் ஒப்பந்தம் போட்டது முதலே இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. தற்போது புதிதாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்க் கட்சிகளின் குற்றச் சாட்டுகளை உண்மையாக்கும் விதத்தில் உள்ளன.

பொதுவாக ஒரு மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவை. அதன்படி அதானி நிறுவனம் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய 3 ஆயிரத்து 240 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண் டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 7-10-2014 தேதிய நடவடிக்கைபடி, Load Flow Study (மின்னோட்டப் பகுப்பாய்வு) செய்த பின்பும், பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்தப்பட்ட பின்பும், நிலத் தேவையைப் பூர்த்தி செய்த பிற குமே முதுநிலை முடிவு செய்யப் படும். இந்தத் தேவைகளையெல் லாம் அதானி குழுமம் நிறை வேற்றி யுள்ளதா என்றால் கிடையாது.

அதானி குழுமத்திடமிருந்து ரூ.4 ஆயிரத்து 536 கோடி ரூபாய் செலவில், ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விகிதத்தில் 25 ஆண்டு களுக்கு மின்சாரம் வாங்குவதற் கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு 4-7-2015 அன்று கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்த இரண்டே வாரங்களில், மத்தியப் பிரதேச அரசுக்கு ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரம் ரூபாய் 6.04 என்ற விலையில் வழங்க அதானி நிறு வனம் விண்ணப்பித்தது.

அப்போது பிரச்சினைகள் கிளம்பியதால், அதானி நிறுவனத் தின் விலைப்புள்ளியை நிராகரித்த மத்தியப்பிரதேச அரசு, மொரீஷி யஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்கை பவர் சவுத் ஈஸ்ட் ஏஷியா என்ற நிறுவனத்தோடு ஒரு யூனிட் ரூ.5.05 என்ற விலையில், 25 ஆண்டுளுக்கு மின்சாரம் வாங்க ஒப்புதல் அளித்தது.

சூரிய ஒளி மின்சார உற்பத் திக்காக தமிழகத்தில் அதானி நிறுவனம் வாங்குகிற நிலங்களை சரி பார்ப்பதற்காக கபிலன் என்னும் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். ஒரு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வழங் கப்படும் என்று அதானி நிறுவனம் கூறிய போது, ஒரு ஏக்கர் சரிபார்க்க ரூ.15 ஆயிரம் வேண்டும் என்றும் இல்லையென்றால் அதானி நிறுவனம் அமைக்கும் சூரிய ஒளி மின் பூங்காக்கள் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிடுவேன் என்றார் கபிலன்.

மேலும், சூரிய ஒளி மின் பூங்கா அமைப்பதற்காக நிலம் வாங்கிய தில் பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடந்துள்ளன. மின்சாரம் வாங்குவதற்காக தமிழக மின் வாரியத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பல்வேறு சட்டவிரோதமான ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன என்றும் கபிலன் கூறினார்.

மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சூரிய ஒளி மின்சா ரத்தை யூனிட் ஒன்றுக்கு தமிழ்நாட்டு விலையை விட இரண்டு ரூபாய் குறைவாக வாங்கிய நிலையில், அதிக விலை கொடுத்து வாங்கக் காரணம் என்ன? 947 மெகாவாட் மின்சாரத்தை இந்த விலைக்குக் கொள்முதல் செய்தால் அரசு கஜானாவுக்கு, ரூ.7 ஆயிரத்து 576 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுவது உண்மையா, இல்லையா? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்