சென்னையில் 10 நாட்களுக்கு எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்? - முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: நாளை முதல் தலைநகர் சென்னையில் எந்தெந்த சாலைகளில் எல்லாம் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்த முழு விவரம் பார்ப்போம்.

சென்னையில், ஈ.வே.ரா சாலையில் உள்ள அண்ணா வளைவு மற்றும் வடபழனி முதல் அசோக் பில்லர் வரையிலான இடங்களில் நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது.

ஈ.வே.ரா சாலையில் உள்ள அண்ணா ஆர்ச் பகுதி கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 75 மீட்டர் சுற்றுப்பாதையில் ‘யு’ திருப்பம் மேற்கொண்டு ஈவிஆர் சாலையை அடைந்து அமைந்தகரைக்கு செல்ல வேண்டும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர் மேம்பாலத்தின் வழியாக சென்று அடையலாம்.

அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில் பாதசாரி கடக்கும் போது தவிர தடையின்றி செல்லலாம்.

அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள், அண்ணா வளைவில் வலது புறம் திரும்பும் போது, பாதசாரி கடக்கும் போது தவிர, இடையூறு இல்லாமல் தொடர்ந்து செல்லலாம்.

கோயம்பேட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் வலதுபுறம் திரும்பும் வகையில் அண்ணா ஆர்ச்சில் ‘யு’ திருப்பம் எடுத்து, அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பி அரும்பாக்கத்தை அடையும்.

அசோக் பில்லர் முதல் வட பழனி வரை

100 அடி சாலை 2வது நிழற்சாலை சந்திப்பிலிருந்து 4வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

அசோக் பில்லர் வழியாக கோயம்பேடு, வடபழனி மற்றும் கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போல செல்லலாம்

அசோக் பில்லர் வழியாக தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலைச் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை மற்றும் அம்பேத்கர் சாலை வழியாக செல்லலாம்.

கோயம்பேடு மற்றும் வடபழனி வழியாக அசோக் பில்லர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை வழியாகச் சென்று, கவிஞர் சுரதா சிலை அருகில் 100 அடி சாலையினை அடைந்து அசோக்பில்லர் நோக்கிச் செல்லலாம்.

வடபழனியில் இருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக தி.நகர் அடையலாம்.

பி.டி.ராஜன் சாலை, பி.வி.இராஜமன்னார் சாலை சந்திப்பில் இருந்து 2வது நிழற்சாலை, 100 அடி சாலை வரை தற்போதுள்ள ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டு இருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்தப்படும்.

பி.டி.ராஜன் சாலை, இராஜமன்னார் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் நேராக 2வது நிழற்சாலை, 100 அடி சாலையினை அடைந்து நேராக 2வது நிழற்சாலை வழியாக தி.நகர் மற்றும் அசோக்பில்லர் செல்லலாம்.

வடபழனி மார்க்கத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக 3வது மற்றும் 6வது நிழற்சாலை அடைந்து 100 அடி சாலையில் வலதுபுறம் திரும்பி கே.கே.நகரினை பி.டி.ராஜன் சாலை வழியாக அடையலாம்.

கோடம்பாக்கம் மற்றும் தி.நகர் மார்க்கத்திலிருந்து வடபழனி மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் 4வது நிழற்சாலை வழியாக, 3வது மற்றும் 6வது நிழற்சாலை வழியாக 100 அடி சாலை வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டிய வழித்தடத்தில் செல்லலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

39 mins ago

விளையாட்டு

50 mins ago

இந்தியா

58 mins ago

வாழ்வியல்

4 mins ago

க்ரைம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

உலகம்

1 hour ago

கருத்துப் பேழை

44 mins ago

விளையாட்டு

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

மேலும்