காரைக்காலில் கொலை மிரட்டலால் ராகுல் பிரசாரம் ரத்து

By செய்திப்பிரிவு

ராகுல் காந்திக்கு வந்த கொலை மிரட்ட லைத் தொடர்ந்து, நேற்று அவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக காரைக்காலுக்கு வருவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய் யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 30 தொகுதிகளில் போட்டியிடு கிறது. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, காரைக்காலில் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொள்ள இருந் தார்.

இதற்கிடையே முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு மர்மக் கடிதம் வந்தது. அதில் ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. நாராயணசாமி புதுவை மாநில ஐஜி பிரவீர் ரஞ்சனிடம் முறையிட்டார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் காரைக்கால் வருகை ரத்து செய்யப் பட்டதாக நாராயணசாமி அறிவித்தார். ஏற்கெனவே கடந்த ஆண்டு நாராயண சாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. தமிழ் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதி கரித்துள்ளது. இதுதொடர்பான விசா ரணை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ஐஜி பிரவீர் ரஞ்சன் கூறும்போது, ‘‘சுமைதூக்குவோர், கூலி தொழிலாளர்கள் என்று பெயரிட்டு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. கடிதம் கையால் எழுதப்பட்டிருந்தது. இதுதொடர் பாக விசாரணையை தொடக்கியுள்ளோம். இக்கடிதம் தன்வந்திரி நகர் தபால் நிலையத்தில் போடப்பட்டிருக்கிறது. அதற்கான அச்சு அதில் உள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்