'லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நீங்கள்' - தோனிக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 41ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது.சென்னக்காக நீங்கள் விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

39 mins ago

க்ரைம்

43 mins ago

இந்தியா

52 mins ago

விளையாட்டு

53 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்