3 தொகுதிகளில் வேட்புமனு தள்ளுபடி: முறையாக பயிற்சி அளித்தும் கோட்டைவிட்ட பாமக வேட்பாளர்கள்

By சி.கண்ணன்

தனியாக குழு அமைத்து பயிற்சி அளித்தும் பாமக வேட்பாளர்கள் தவறு செய்ததால் 3 தொகுதிகளில் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. 234 தொகுதி களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால் தூத்துக்குடி, திருச் செந்தூர், ராமநாதபுரம் தொகுதி களில் பாமக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் தலைமையில் தனியாக குழு அமைத்து, வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து பயிற்சி அளித்தும் இந்த தவறு நடந்துள்ளது.

தூத்துக்குடி தொகுதி பாமக வேட்பாளர் அ.சேசையா பர்னாந்து (மாவட்டச் செயலா ளர்) தனது வேட்புமனுவில் வாக்காளர் பட்டியல் பாகம் எண், தொடர் எண்ணை தவறாக குறிப்பிட்டிருந்ததால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் த.உஜ்ஜல் சிங் (மாநில துணைப் பொதுச் செயலாளர்) கடைசி நாளான 29-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆவணங்கள் எதை யும் இணைக்காமல் இருந்த தால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல, ராமநாதபுரம் தொகுதி பாமக வேட்பாளர் எ.அப்துல் லத்தீப் (நகர தலைவர்) வேட்புமனுவை 10 பேர் முன்மொழிந்திருந்தனர். 10-வது நபர் கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு பெயர் மற்றும் விவரத்தை குறிப்பிடா மல் இருந்ததால், அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.

தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகளில் பாமக மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் தொகுதியில் மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்யவில்லை. அதனால், 233 தொகுதிகளில் மட்டும் பாமக போட்டியிடுகிறது.

ஏ.கே.மூர்த்தி வருத்தம்

இதுதொடர்பாக பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘தனியாக குழு அமைத்து வேட்புமனுவை எப்படி பூர்த்தி செய்வது. எப்படி தாக்கல் செய்வது. என்னென்ன ஆவணங்களை இணைப்பது என்று பயிற்சி அளித்தோம். அப்படி இருந்தும், 3 வேட்பாளர் கள் தவறு செய்துவிட்டனர். அதை நினைத்தாலே வருத்த மாக இருக்கிறது. நாடு சுதந் திரம் அடைந்ததில் இருந்து இதுவரை தமிழகத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் 233 தொகுதிகளிலும் தனியாக வேட்பாளர்களை நிறுத்திய தில்லை. ஆனால், பாமக 233 தொகுதிகளிலும் வேட் பாளர்களை நிறுத்தியுள்ளது. இதுவே எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்