ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்

By செய்திப்பிரிவு

திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் தற் போதைக்கு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

அவர் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 7-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் நடந்த தேர் தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக் கப்பட்டு இருந்தார். இருந் தாலும் அதைப் பற்றி யாரிட மும் அவர் சொல்லாமல் கூட்டங் களில் பங்கேற்றார். அதனால், இப்போது அவரது உடல் நிலை சரியில்லாததால் கன்னியா குமரி, நாகர்கோவிலில் நடை பெற உள்ள அவரது பிரச் சாரக் கூட்டங்கள் தள்ளிவைக்கப் பட்டுள்ளன. ராகுல்காந்தி மே 13-ம் தேதி தமிழகத்துக்கு மீண்டும் பிரச்சாரத்துக்கு வருவார் என எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்க ளுக்கு பணம் வழங்குவதற்காக அதிமுகவினர் 5 கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளனர். ஒவ் வொரு வாக்காளர்களுக்கும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் எல்லோ ருக்குமே பணம் கொடுப்ப தற்கான ஏற்பாடுகளை செய்துள் ளனர். தேர்தல் ஆணையம் உட னடியாக ராணுவத்தின் துணை கொண்டு பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும். பணம் கொடுத்தால் பொதுமக்கள் அது குறித்து போலீஸாருக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தடுக்கும் என நம்புகிறேன்.

தமிழகத்தில் ஓரளவுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் சென்றுள்ளேன். சென்ற இட மெல்லாம் மிகப்பெரிய அளவில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. இந்த வரவேற்பு மிகப்பெரிய வெற்றியாக மாறும். திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் தற் போதைக்கு இல்லை. அதைப் பற்றி பேசுவதற்கான சந்தர்ப் பமும் தற்போது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

14 hours ago

மேலும்