தமிழகத்தில் 3-வது அணி இல்லை: பழ.நெடுமாறன் கருத்து

By செய்திப்பிரிவு

மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க. ஆகியவை திராவிடக் கட்சிகளின் கொள்கைகளையே பின்பற்றுவதால் அக்கட்சிகள் தமிழகத்தின் 3-வது அணி கிடையாது என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழ்நாட்டில் கொள்கை அடிப்படையில் எந்த கூட்டணியும் அமைக்கப்படவில்லை. தேர்தலுக் கேற்ப சந்தர்ப்பக் கூட்டணியே அமைக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த அரசியல் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ், தமிழ் எனக் கூறும் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ய வில்லை. பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவோம் எனக் கேரள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித் துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்போம் என தமிழக கம்யூனிஸ்டுகள் கூறியுள்ளனர். இது முரண்பாடானது.

சட்டப் பேரவைக்கே செல்லாத தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எப்படி முதல்வராக செயல்பட முடியும்? சட்டப் பேர வைக்குச் சென்று கேள்வி கேட்காத காரணத்தால் ஆளும் கட்சி செய்யும் தவறுகளுக்கு இவர்களும் காரணமா கின்றனர். தமிழ்நாட்டில் 3-வது அணி அமைய வேண்டும் என்பது என் விருப் பமாக இருந்தது. ஆனால் தற்போ துள்ள மக்கள் நலக்கூட்டணி, பாமக ஆகிய கட்சிகள் திராவிட கொள்கை களையே பின்பற்றுகின்றன. எனவே, இந்த கட்சிகள் 3-வது அணி கிடை யாது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்