ஈவிகேஎஸ் மீது அவதூறு வழக்கு: முதல்வர் ஜெ. தொடர்ந்தார்

By செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந் துள்ளார்.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு குற்றவியல் வழக் கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 30.4.16 அன்று தனியார் டிவி ஒன்றில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஆளுநர் ரூ.15 கோடி வாங்குவதாகவும், அதில் ரூ.10 கோடியை தமிழக முதல்வருக்கு கொடுத்துவிட்டு, மீதி ரூ.5 கோடியை அவரே வைத்துக்கொள்வதாகவும் அபாண்டமான குற்றச்சாட்டை ஆதாரமில்லாமல் அவதூறாக கூறியுள்ளார். எனவே, அவர் மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விவகாரத்தில் இளங்கோவன் மீது தமிழக ஆளுநர் ரோசய்யா சார்பிலும் கடந்த வாரம் இதே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்