அரசூரில் ஏழை மக்களின் வீடுகளை இடிக்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசூரில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் வீடுகளை இடிக்கக் கூடாது, அவர்கள் தொடர்ந்து அதே பகுதியில் வாழ வகை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் அரசூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் 22 குடும்பங்களின் வீடுகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவாய்த்துறையினர் முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும். இடிக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

அரசூரில் மக்கள் வாழும் பகுதிகள் நீர்நிலைப் பகுதிகள் அல்ல. அவை மேடான பகுதிகள். சென்னையில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனங்களின் கட்டிடங்களை இடிக்காமல் பாதுகாக்கும் அரசு, அப்பாவி ஏழை மக்களின் வீடுகளை இடிக்க முயல்வது நியாயமல்ல.

அரசூரில் வாழும் மக்கள் மிகவும் ஏழைகள். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் வீடுகளை இடிக்கக் கூடாது. அவர்கள் தொடர்ந்து அதே பகுதியில் வாழ வகை செய்வதுடன், அந்த இடங்களுக்கு பட்டா வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

21 mins ago

வணிகம்

35 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

48 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

4 hours ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்